2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

உகன பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர் தப்பியோட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (எஸ்.மாறன்)
அம்பாறை உகண பிரதேசத்தில் குற்றச்செயலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபரொருவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றவேளை அந் நபர் தப்பியோடியுள்ளதாக உகண பொலிஸார் தெரிவித்தனர்

உகண திஸபுர பிரதேசத்தை சேர்ந்த ஈ.பி.சமந்தபண்டா (வயது 26) என்ற நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

மேற்படி நபர், உகன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதாக கூறி அவரிடமிருந்து பணம் பெற்றுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் பொலிஸில் முறைப்பாடு செய்த வேளை அந்நபரின் வீட்டுக்கு சென்று மேற்படி நபர் கொலை அச்சுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த முனைந்தவேளை சந்தேகநபர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X