2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேசிய காங்கிரஸில் இணைந்ததாக கூறப்படுவதை மத்திய முகாம் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் மறுப்பு

Super User   / 2012 செப்டெம்பர் 02 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை, மத்திய முகாம் அமைப்பாளர் எம்.எச்.லதீப், தேசிய காங்கிரஸில் இணைந்ததாக சில ஊடகங்களில வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

தன்னை அமைச்சர் அதாவுல்லாவின் இணைப்புச் செயலாளர் அன்வர் என்பவரும் இன்னும் சிலரும் எனது விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக அமைச்சரிடம் கூட்டிச் சென்றதாக அவர் கூறினார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இதன்போது, 10 இலட்சம் ரூபா பணமும் வாகனமொன்றும்  தருவதாக அமைச்சர் அதாவுல்லா உறுதியளித்தாக அங்கிருந்து மீண்டு வந்து தலைவர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து  லதீப் கூறினார்.அத்துடன் எதிர்வரும் 5ஆம் திகதி அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள தேசிய காங்கிரஸின் பொதுக் கூட்ட மேடையில் வந்து அமருமாறு வற்புறுத்தினர்.

நாவிதன்வெளி பிரதேச தேசிய காங்கிரஸ் அமைப்பாளராக நியமிப்பதாகவும் தெரிவித்தனர் என அமைப்பாளர் லதீப் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்திய லதீப், நேற்று சனிக்கிழமை இரவு நிந்தவூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X