2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 03 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பாரிய வீதி விபத்துக்கள்,  மோட்டார் போக்குவரத்து விதிமுறைகளை மீறிச் செயற்படுதல் ஆகியவற்றை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் விளக்கமளிக்கும் கூட்டம் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

வீதி விபத்துக்கள் சம்பவிக்கும் சந்தர்ப்பங்கள்  தொடர்பான வீடியோக் காட்சிகளுடன் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி  உதவி பொலிஸ் பரிசோதகர் என்.ஆர்.டபிள்யூ.நவரத்னவின் ஏற்பாட்டில், பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் றணகல உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • uvais.m.s Monday, 03 September 2012 11:29 AM

    எல்லோரும் கலந்து கொண்டார்கள் சரி ..என்னதான் விளக்கம் அளித்தார்கள் என்பதை நீங்கள் சொன்னால் தானே கூட்டத்துக்கு போக கிடைக்காத மக்களால் பார்க்க முடியும்,பத்திரிகைகள் தலைப்பை மட்டுமே கொடுத்தால் போதாது மக்களுக்கு தேவை ஆனா விளக்கம்களையும் கொடுக்க வேண்டும் ....அநேகமாக இந்த கருத்து பிரசுரம் ஆகாதுன்னு நினைக்கிறான் பார்க்கலாம்.

    Reply : 0       0

    rima Saturday, 08 September 2012 06:59 PM

    நண்பா சரியாக சொன்னிர்கள் நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X