2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழ் பிரதேச செயலகங்களுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடு: த.கலையரசன்

Kogilavani   / 2012 நவம்பர் 26 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                          (ஜவீந்திரா)
தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் அரசினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிப்பங்கீட்டு விடயத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேச செயலகங்களுக்கு குறைந்தளவு நிதியே ஒதுக்கீடு செய்ப்படடுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கிழக்கு மாகாண ஆளுனருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகண ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அக்கடித்தில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,

அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்கள் கடந்த கால யுத்தத்தின்போது பெரிதும் பாதிக்கப்பட்டதாகும். இப்பகுதி மக்கள் மத்தியில் தற்போது குடிநீர், போக்கவரத்து, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம், மலசலகூடம் மற்றும் வீடமைப்பு, பேன்றவைகள் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே இவற்றினைக் கருத்தில் கொண்டு இப்பிரதேச செயலகங்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை அதிகரித்து இப்பகுதி மக்களின் அபிவிருத்திக்கு உதவுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கடித்தின் பிரதிகள் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் அம்பாறை மாவட்ட செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X