2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தொல்பொருள் பிரதேசத்தில் புதையல் தோண்டியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 நவம்பர் 27 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


திருக்கோவில் பிரதேச செயலத்திற்குட்பட்ட உள்ள சாகாமம் - மொட்டை கல்மலை, ஊரக்கை வயலில் தொல்பொருள் பிரதேசம் என இனங்காணப்பட்ட பிரதேசத்தில் புதையல் தோண்டியமைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக புராதன விகாரையொன்றை தகர்த்துள்ளமையை கண்டித்து பௌத்த தேரர்கள் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

அம்பாறை விகாராதிபதி கினிவெல சோமரத்ததின தேரோ தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டம் சாகாம வீதியிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்த புதையல் தோண்டப்பட்ட தொல்பொருள் பிரதேசம் வரை பல சுலோகங்களை எந்தியவாறு சென்றனர்.

இதில் அம்பாறை நகர சபையின் தலைவர் இந்திக நளின் மற்றும் பௌத்த தேரர்கள் உட்பட பலர்  கலந்துகொண்டனர். இந்த தொல்பொருள் பிரதேசத்தில் புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X