2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு மாகாண சபை முஸ்லிம்களின் அதிகாரங்கள் கூடிய சபையாக உள்ளது: நஸீர் அஹமட்

Kogilavani   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)
'கிழக்கு மாகாண சபையானது அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் அதிகாரங்கள் கூடியதொரு சபையாக உள்ளது. ஒரு இஸ்லாமிய அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றதொரு சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது' என கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

சிவில் சமூக ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ துறை தலைவர் வ. கனகசிங்கம் எழுதிய நவீன முகாமைத்துவ நடைமுறைகள் நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இனவேறுபாடுகளை மறந்து, இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, முழுக் கிழக்கு மாகாணத்தினையும் முன்னேற்றிக் காட்டுவோமாக இருந்தால் முழு இலங்கைக்கும் உதாரணமாக கிழக்கு மாகாணம் திகழும். மாகாணசபை முறைமையினூடாக எடுத்துக் காட்டான வெற்றிகளை நாம் அடைந்து கொள்ளும் போது, மாகாணசபை முறைமையினை இல்லாதொழிக்கும் சிந்தனைகள் எடுபடாமல் போய்விடும்.

ஒரு மாகாணசபையானது அதனுடைய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுமாக இருந்தால் அதனை அழிக்க முடியாது. இன்று மாகாண சபை முறைமையினை இல்லாமலாக்கப் போவதாக அரசியல் அரங்கில் பல்வேறு பேச்சுக்கள் உலாவுகின்றன. ஆனால், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை இல்லாமலாக்குவது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை எதுவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

மாகாண சபைக்குரிய அதிகாரங்களை சரியான முறையில் நாங்கள் அமுல்படுத்த முடியுமாக இருந்தால், மாகாணசபை முறைமை வெற்றிகரமானதாக மாறும்.

வெறுமனே அமரந்துகொண்டிருக்கின்ற அரசியல்வாதிகளாக அல்லாமல், மாகாண சபைகளின் வளங்களையும், அதிகாரங்களையும்
செம்மையாகப் பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகளாக இருப்போமாயின் மாகாணசபைகளை வெற்றிகரமானதாக மாற்ற முடியும்.

இன்றுள்ள கிழக்கு மாகாணசபையானது அரசியல் ரீதியாக முஸ்லிம்களின் அதிகாரங்கள் கூடியதொரு சபையாக உள்ளது. ஒரு இஸ்லாமிய அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றதொரு சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது.

இனவேறுபாடுகளை மறந்து, இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, முழுக் கிழக்கு மாகாணத்தினையும் முன்னேற்றிக் காட்டுவோமாக இருந்தால்  முழு இலங்கைக்கும் உதாரணமாக கிழக்கு மாகாணம் திகழும். மாகாணசபை முறைமையினூடாக எடுத்துக் காட்டான வெற்றிகளை நாம் அடைந்து கொள்ளும் போது, மாகாணசபை முறைமையினை இல்லாதொழிக்கும் சிந்தனைகள் எடுபடாமல் போய்விடும்.

கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருந்தாலும், நிர்வாக ரீதியாக தமிழ் சகோதரர்கள் அதிகாரமுள்ளவர்களாக இருக்கின்றனர். எனவே, அரசியலில் இருப்பவர்களும், நிர்வாகிகளும் இன, மத பேதங்களை மறந்து நியாயமான முறையில் செயற்பட்டால் வெற்றிகரமான கிழக்கு மாகாணத்தினை நாமும், நமது சந்ததிகளும் தரிசிக்க முடியும்' என்றார்.                                                                                                                                                                                                

  Comments - 0

  • meenavan Tuesday, 04 December 2012 11:35 AM

    இருக்கின்ற அதிகாரம் அதிகம் என்பதனால் தான் திவிநெகும சட்டமூலத்திட்கு ஆதரவு வழங்கினீர்களா....????

    Reply : 0       0

    suresh Sunday, 09 December 2012 02:09 AM

    அத நீ சொல்ல தேவல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X