2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை, திருக்கோவில் அளிக்கம்பை அரச தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த 313 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் துரை.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.

நற்குண முன்னேற்ற அமைப்பின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று மூன்றாவது இராணுவ படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஹரன் பெரோர, நற்குண முன்னேற்ற அமைப்பின் செயற்திட்ட முகாமையாளர் ஆனந்த ஜெயவர்த்தனா, அளிக்கம்பை தேவாலய பங்குத்தந்தை வணபிதா ஜோசப் மேரி, 631 படைப்பிரிவின் தளபதி கேணல் பி.கே.பி.கமகே, கேணல் மாயதுங்க, சிவில் நிர்வாக இணைப்பாளர் கேணல் பிரசாத் தென்னக்கோன், ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி பணிப்பாளர் வா.குணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள், பாதணிகள், புத்தகபை மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் தலா 3,500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X