2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வரவு செலவுத் திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கிழக்கு மாகாணசபை கால்நடை உற்பத்தி, சிறுகைதொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை அமுல்படுத்துவது தொடர்பிலான ஆலோசனைக் கூட்டமொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை மாகாணசபை கட்டிடத்தில் இடம்பெற்றது.

கால்நடை உற்பத்தி, சிறுகைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில், அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்து பேசப்பட்டதோடு, திட்டங்களை அமுல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்தும் ஆராயப்பட்டது. 

இதன்போது, சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட பிரதியொன்றினை அமைச்சின் பிரதம கணக்காளர் ஏ.ரகுநாதன், திட்டமிடல் பணிப்பாளர் டொக்டர் ஆர்.ஞானசேகர் ஆகியோரிடம் அமைச்சர் ஹாபீஸ் நஸீர் கையளித்தார்.

முன்னதாக இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து, சபையில் சமர்ப்பிப்பதற்காக 5 அமைச்சுக்களுக்குமான வரவு செலவுத் திட்ட ஆவணங்களை அமைச்சின் செயலாளர் கே.பத்மநாபனிடமிருந்து அமைச்சர் ஹாபிஸ் நஸீர் பெற்றுக்கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X