2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பில் வயோதிபரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

ஆலையடிவேம்பு, தீவுக்காலை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். தீவக்காலை, சுனாமி வீட்டுத்திட்த்தைச் சேர்ந்த 73 வயதான எஸ்.யோன்வெஸ்லி என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவரின் மனைவியார், நேற்று வெள்ளிக்கிழமை பிள்ளைகளின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை வீடு திரும்பிய மனைவி, கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.  இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X