2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அம்பாறையில் காற்றுடன் கூடிய கடும் மழை

Kogilavani   / 2013 ஜனவரி 10 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய கடும் மழை இன்று அதிகாலை முதல் பல மணி நேரம் தொடர்ந்து பெய்ததால் மீண்டும் வீதிகள் மற்றும் வளவுகளில் வெள்ள நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் மழை ஓய்ந்து வெயிலுடனான காலநிலை காணப்பட்ட போதிலும், இன்று அதிகாலை முதல் பல மணிநேரம் கடும் மழை பெய்தது.

இதனால், பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

காலை 11 மணிவரை மழை மற்றும் இருள் சூழ்ந்த காலநிலை காணப்பட்ட போதிலும் தற்போது மழை ஓய்ந்து காலநிலை ஓரளவு சீரடைந்துள்ளது.                                                              






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X