2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பேன்: முதலமைச்சர்

Super User   / 2013 ஜனவரி 17 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீட் தெரிவித்தார்.

தேசிய உற்பத்தி திறன் போட்டியில் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலை விருது பெற்றமையை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுத் தலைவரும் சிரேஷ;ட விரிவுரையாளருமான ஏ.நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காஸீம், எம்.ரீ.ஹசன்அலி, மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மற்றும் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமலநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வெற்றிக்காக உழைத்த வைத்திய அதிகாரி எம்.பி.எம்.மாஹிர் உட்பட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.மேலும் இந்நிகழ்வின்போது வைத்தியசாலைக்கான இணையத்தளத்தையும் முதலமைச்சர் ஆரம்பித்துவைத்ததுடன் விசேட தேவையுடைய 20 பேருக்கு சக்கரநாற்காலி என்பனவும் வழங்கபட்டன.

இந்த நிகழ்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசீம்  முதலமைச்சருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.

  Comments - 0

  • mohamed anas Friday, 18 January 2013 04:41 AM

    நீந்தவூர் மக்கசூள இதை நம்ப வேணடாம் பொய் வாக்குறுதி முதலமைச்சரால் எதுவும் செய்ய முடியாது இதுவரை எதுவும் செய்யல செய்யல,

    Reply : 0       0

    Naz Friday, 18 January 2013 05:48 AM

    பாராட்ட வேணடிய விடயம். சொந்த ஊரான் என்ற வகையில் ஊர் பாசம் உள்ளது. ஊரில் இருக்கும் அடுத்த குடிமகன் என்ன தூக்கமா?

    Reply : 0       0

    rima Friday, 18 January 2013 08:37 AM

    ஆதிகாரம் இல்லா அரசியல்வாதிகலோ நீங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X