2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் பார்வை

Kogilavani   / 2013 ஜனவரி 26 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்
, ஜவீந்திரா

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இருப்பிடங்களை விட்டு வெளியேறி பாடசாலைகளில் தங்கியுள்ள ஏறாவூர் பிரதேச மக்களை கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதோடு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் படுக்கை விரிப்புக்களை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கிவைத்தார்.

ஏறாவூர் தாமரைக்கேணி அலிஸாஹிர் மகாவித்தியாலயத்தில் 80 குடும்பங்களும் ஹிஸ்புல்லா நகர் அஷ்ரப் வித்தியாலயத்தில் 169 குடும்பங்களும் சதாம் ஹுசைன் முஹாஜிரீன் கிராமத்தில் 168 குடும்பங்களும் இவ்வாறு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.

இதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு  கிழக்கு மாகாண அமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் - தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதன்போது, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அபுல் ஹசன், எஸ்.எம். றிபாய், முன்னாள் பிரதேச சபைத் தலைவர எம்.சி. கபூர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தனர். 
                                                                                                                               

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X