2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அமைச்சர் அதாஉல்லாவின் பணிகளை விமர்சிக்க அருகதை கிடையாது: மாநகர சபை உறுப்பினர்

Super User   / 2013 பெப்ரவரி 03 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் அரசியலில் அமைச்சர் அதாஉல்லாவின் சமூக நலன் கருதிய அபிவிருத்தி திட்டங்களை குறைத்து மதிப்பீடு செய்வதற்கும் விமர்சனம் செய்வதற்கும் யாருக்கும் எவ்வித தகுதியும் கிடையாது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் அஸ்மி ஏ கபூர் தெரிவித்தார்.

பிரதேச இன நலன்களுக்கு அப்பாலான அவரது சேவைகள் வரவேற்கத்தக்கதாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தென் கிழக்கு பிரதேச சட்டத்துறை மாணவர்களுடனான கலந்துரையாடல் அண்மையில் தெமடகொடையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
 
"ஆதாரமற்ற  முக்கியத்துவமல்லாத செய்திகளையும் தனிநபர்களின் பெயர்களை குறித்து அற்பமாக வெளியிடப்படும் அறிக்கைகளையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இது சமுக மேம்பாட்டுக்கான விடயத்தில் காத்திரமான பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. தவிர தனி மனிதர்களுக்கு எதிராக பழிவாங்கும் உள்நோக்கம் கொண்டதாக அமைகிறது.

முஸ்லிம் வாக்குகளை இனத்துவ அடையாளத்தை    முன்னிறுத்தி அவர்களது இன உணர்வை மேலிடச் செய்து சமுகத்தினுடைய வாக்குகளை கபளீகரம் செய்து பெற்றுக்கொண்டவர்கள் அவர்களின் முன்னால் இருக்கின்ற பாரிய பிரச்சனைகளான குறிப்பாக பள்ளிவாசல் பிரச்சினை, ஹலால் சான்றிதழ் விவகாரம், சட்டக் கல்லூரி மாணவர்கள் அனுமதி விடயங்களை விட்டுவிட்டு வெறுமனே அமைச்சர் அதாஉல்லாவுக்கு எதிரான கோரிக்;கை முன்வைப்பது வேடிக்கையாகவுள்ளது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபை தவிர ஏனைய பெரும்பாலான உள்ளுராட்சி சபை அரசாங்கத்துடன் பங்காளியாக இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸிடம் உள்ளது. இவ்வாரிருந்தும் பொத்துவில், அட்டாளைச்சேனை இறக்காமம் கல்முனை ஆகிய பகுதிகளுக்கும் அமைச்சரால் மாறுபட்ட முறையில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

அதே போல் மாகாண சபை அமைச்சர் உதுமாலெப்பையினால் அட்டாளைச்சேனையிலும் ஏனைய பிரதேசங்களிலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அரசின் மூன்;;றில் இரண்டு பெரும்பாண்மைக்கு காரணமாக இருந்தவர்கள் என்றும் கிழக்கில் நாங்கள் ஆட்சியின் பங்குதாரர்கள் என்று கூறுபவர்களாளும் எதை சாதிக்க முடிந்தது?

இன்னும் பதவிகள் தொடர்பான பிரச்சினையில் முழ்கி கிடக்கும் நிலையை ஊடகங்களுக்கூடாக அறியக்கிடக்கின்றது. நாங்கள் தேசியக் காங்கிரஸின் அரசியலில் இருக்கிறோமா? என்கின்ற சந்தேகங்கள் நிலவினாலும் இவ்வாறான கீழ்த்தரமான கருத்துக்களையும் தனி நபர்களின் பெயர் குறிப்பிட்டுப் பேசுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்றார்.

  Comments - 0

  • nawshad Sunday, 03 February 2013 12:40 PM

    திருகோணமலை பாயிஸ் கட்சியிலிருந்து வெளியேறியது எதற்காகவாம்?

    Reply : 0       0

    Hari Sunday, 03 February 2013 12:44 PM

    தம்பி அஸ்மி அவர்களுடைய கருத்தைப்பார்த்தால் பள்ளிவாயல், ஹலால், சட்டக்கல்லூரி பிரச்சினைகள் அல்லது றிசானா, ஒலுவில் அஸ்ரப் நகர், நுரச்சோலை வீடு, பொத்துவில் காணிப்பிரச்சினைகள் அமைச்சர் அத உல்லாஹ் சார்ந்தவிடயங்களல்ல போன்று தோன்றுகிறது. இவைகள் முஸ்லீம்கள் தொடர்பானவை அல்லதா? ஏன் அவரைச்சார்ந்த அமைச்சருக்கு இதுதொடர்பாக கரிசனை இல்லை என்பதை அஸ்மி விளக்குவாரா?

    Reply : 0       0

    kaja Sunday, 03 February 2013 03:58 PM

    தம்பி நீங்க அந்த ஊர்க்காரன் என்றபடியால் இந்தமாதரி சொல்ல வேண்டாம்... அதாவுல்லா என்ன பண்ணிறார் என்று எங்களுக்குத் தெரியும்... மக்களுக்கு நல்லது செய்வதாய் பாருங்கல்...

    Reply : 0       0

    kiyas Monday, 04 February 2013 07:54 AM

    மக்களுக்கக என்ன செய்கிறார் மக்களுக்கு என்ன நடந்தாலும் ஒன்றும் தெரியாதவராக இருக்கிறார் உங்கள் அதாவுல்லா...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X