2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வேளாண்மை தொழிலில் ஈடுபட்ட இந்திய பிரஜையை நாட்டிலிருந்து வெளியேற்ற உத்தரவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 21 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

சுற்றுலா விஸாவில் இலங்கை வந்து வேளாண்மை தொழிலில் ஈடுபட்ட இந்திய பிரஜை ஒருவருக்கு 5,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரை நாட்டைவிட்டு உடனடியாக வெளியேற்றுமாறும் கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்படி நபரை நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தியபோதே, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்,ஏ.றிஸ்வி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

நாவிதன்வெளி, சவளக்கடை வயலில் வேளாண்மை வெட்டும் இயந்திரத்தில் வேலை செய்துகொண்டிருந்த இவரை இராணுவத்தினர் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கைதுசெய்து சவளக்கடை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து மேற்படி இந்திய பிரஜையை நாட்டை விட்டு அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X