2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சுருக்குவலை மீன்பிடியால் கரைவலை மீனவர்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 22 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அம்பாறை மாவட்டம் பொத்துவில் குடாக்கள்ளி கடல் பகுதியில் தடைசெய்யப்பட்ட சுருக்குவலையினை உபயோகித்து மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமையினால், அப்பகுதியிலுள்ள 700 க்கும் அதிமான கரைவலை மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக உள்ளுர் மீனர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறிய 'கண்'களைக் கொண்ட சுருக்கு வலையினைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. இந்த நிலையில் பொத்துவில் குடாக்கள்ளி பகுதி கடற்பரப்பில் சிலர் - சுருக்கு வலையினைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உள்ளுர் மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடலில் சுருக்கு வலை பயன்படுத்தப் படுவதால், குடாக்கள்ளிப் பகுதியில் உள்ள கரைவலை மீனவர்களின் தொழில் நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்படுவதாவும் இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் கொட்டுக்கல் முதல் - குடாக்கள்ளி வரையிலான கடற்கரைப் பிரதேசங்களிலுள்ள கரைவலை மீனவர்கள் தற்போது இவ்வாறான சுருக்கு வலை மீன்பிடி நடவடிக்கைகளினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மீனவர் சங்க பிரதிநிதியொருவர் சுட்டிக் காட்டினார்.

இவ் விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்திருந்தும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எவையும் இடம்பெறவில்லை எனவும் இங்குள்ள மீனவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, தமக்குக் கிடைக்கும் மீன்களை - கடற்கரையிலிருந்து உரிய இடத்துக்குக் ந்கொண்டு செல்வதற்கான வீதியொன்று அமைக்கப்படாமையினால் கடற்றொழிலாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X