2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


இறக்காமம் பிரதேசத்தை சேர்ந்த நன்னீர் மீனவர்கள் மற்றும் சிறு கைத்தொழிலாளர்களுக்கான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இறக்காமம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்க கட்டிட வளாகத்தில் இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் மௌலவி யூ.கே. ஜபீர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஹாபீஸ் நஸீர், எம்.ஐ.எம். மன்சூர், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர், ஆரீப் சம்சுடீன், கிழக்கு  மாகாண விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன், மீன்பிடித்துறை பணிப்பாளர் எஸ். சுதாகரன், விவசாயத்துறைப் பணிப்பாளர் எஸ்.எம். ஹுசைன், சிறு கைத்தொழில் பணிப்பாளர் எல்.டி. தென்னகோன் மற்றும் கால்நடை பணிப்பாளர் ரி.கே. தவராஜன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்.

இதன்போது, நன்னீர் மீனவர்களுக்கான தோணிகள், மீன் பெட்டிகள், மீனவர்கள் இரவு வேளையில் பயன்படுத்தும் விளக்குகள், மீனவர் சங்கங்களுக்கான கதிரைகள், பால் உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்கள், மாடு வளர்ப்போருக்கான கொட்டில்களை அமைப்பதற்கான நிதி ஆகியவையும் சிறு கைத்தொழிலாளர்களுக்கான தையல் இயந்திரங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்துக்கு அமைவாக இறக்காமம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மீனவர் சந்தையினையும் இந்த நிகழ்வின்போது மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் திறந்து வைத்தார்.



  Comments - 0

  • rima Wednesday, 27 February 2013 09:24 AM

    முதுகு எலும்பு இல்லாத ஊமை முஸ்லிம் அமைச்சர்கள் நீங்கள் இருந்துதான் என்ன இறந்துதான் என்ன? இந்த அரசுக்கு முஸ்லிம்களை காட்டி கொடுப்பவர்கள் நீங்கள்

    Reply : 0       0

    rima Wednesday, 27 February 2013 09:27 AM

    இவருகள நம்பமுடியாது...

    Reply : 0       0

    A.G..safeen Sunday, 03 March 2013 02:00 PM

    முதுகு எலும்பு இல்லாத ஊமை முஸ்லிம் அமைச்சர்கள் நீங்கள் இருந்துதான் என்ன இறந்துதான் என்ன? இந்த அரசுக்கு முஸ்லிம்களை காட்டி கொடுப்பவர்கள் நீங்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X