2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'உகந்தமலை திருமுருகன் திருத்தல புராணம்' நூல் வெளியீட்டுவிழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கனகராசா சரவணன்


கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த உகந்தமலை முருகன் ஆலயத்தின் சைவப்புலவர் சைவசித்தாந்த பண்டிர், சோதிடர் சிவஸ்ரீ.லோகநாதக்குருக்களால் இயற்றப்பட்ட 'உகந்தமலை திருமுருகன் திருத்தல புராணம்' நூல் வெளியீட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

அக்கரைப்பற்று, விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஆலய திருப்ணிச் சபை செயலாளர் கே.சிறிபஞ்சாடசரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர் கே.விமலநாதன், பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஜ.எம்.தௌபீக், ஆலையடிவேம்பு

பிரதேசசெயலாளர் வே.ஜெகதீசன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொல்பொருள் ஆய்வாளருமான செல்வி கதிராமன் தங்கேஸ்வரி, ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர்.

இதன்போது, பண்டிர், சோதிடர் சிவஸ்ரீ.லோகநாதக் குருக்களை பொன்னாடைபேர்த்தி கௌரவிக்கப்பட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .