2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

காணி ஆக்கிரமிப்பினை மாகாண சபை உறுப்பினர் நேரில் பார்வை

Super User   / 2013 ஒக்டோபர் 07 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


அம்பாறை மாவட்டத்தின் உள்ள பூர்வீக தமிழ் கிராமமான பெரிய நீலாவணையில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணி கபளீகரம் செய்யப்பட்டுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.இராஜேஸ்வரன் இன்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பெரியநீலாவணை விஷ;ணு ஆலய வீதிக்கும் பெரியநீலாணை மத்திய வீதிக்கும் இடைப்பட்ட இடத்தில் சுனாமிக்கு பின்னர் 65 மீற்றர் திட்டத்தின் கீழ் கழிக்கப்பட்ட கண்டல் தாவரங்கள் நடுவதற்கு விடப்பட்ட இடத்தினை போலியான உத்தரவு பத்திரம் தயாரித்து நில ஆக்கிரமிப்பு இடம்பெற்றுள்ளது.

பெரிய நீலாவணையில் இந்த நில ஆக்கிரமிப்பு செய்வதற்கு வழிவகுத்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேச செயலாளராக பணியாற்றுகின்றார். இதேவேளை தற்காலிக வேலி இடப்பட்ட குறித்த பிரதேச செயலாளரின் இந்த செயற்பாடு இன முரண்பாடுகளை தோற்றுவிக்க வழிசமைத்துள்ளது. இந்த விடயம் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .