2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக கஞ்சா, சிகரெட் வைத்திருந்த மூவருக்கு அபராதம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தடைசெய்யப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்த குற்றத்திற்காககவும் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலும் கைதான மூவருக்கு 29,000 ரூபா தண்டப்பணம் விதித்து அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் தீரப்பளித்துள்ளார்.

தடைசெய்யப்பட்ட எட்டு சிகரெட் பக்கட்டுக்களை வைத்திருந்த குற்றத்திற்காக அட்டாளைச்சேனை, பாலமுனை கிராமத்தைச்சேர்ந்த நபர் ஒருவருக்கும் கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அக்கரைப்பற்று 5ஆம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கும் இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸ் சார்ஜன் யூ.எல்.ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் மூவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர்கள் திங்கட்கிழமை (7) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது மேற்படி நபர்கள் குற்றத்தை ஒப்புகொண்டதற்கிணங்கள இவ்வாறு தண்டப்பணம் விதித்து நீதவான் தீரப்பளித்தார்.

இதில் சிகரெட் வைத்திருந்த குற்றத்தில் கைதான நபருக்கு 17000 ரூபாவும் கஞ்சா வைத்திருந்த இருவருக்கு, தலா 9000, 3000 என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .