2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.கே.றஹ்மத்துல்லா


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை இன்று (08) முன்னெடுத்தது.

பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்கடர் பறூஸா நக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ், மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எம்.ஏ.ஜஃபர், கிராமசேவை அதிகாரிகள், சமூர்த்தி அதிகாரிகள், பிரதேச சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்திலிருந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குடியிருப்பாளர்களுக்கு டெங்கு தொடர்பான ஆலோசனைகள், விழிப்புணர்வுகள் வழங்கப்பட்துடன், டெங்கு உற்பத்தியாகக்கூடிய இடங்களையும், பொருட்களையும் இனம் கண்டு அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளும் இதன்போது மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை கடை உரிமையாளர்களிடம் கழிவகற்றல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்துடன், வடிகான்களில் கழிவுப் பொருட்கள் போடுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலம் மேற்கொள்ளும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .