2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொத்துவிலில் மினி சூறாவளி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பாணம, பொத்துவில் பகுதியில் மினி சூறாவளி வீசியுள்ளது. இதனால் பிரதேச காரியாலயம் உட்பட வீடுகள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

இந்த அனர்த்தம் காரணமாக பல வீடுகள் முழுமையாகவும் பகுதி அளவிலும் சேதமடைந்தள்ளதுடன் மின்சாரமும் தடைப்பட்டு அப்பிரதேசம் முழுவதும் இருளில் மூழ்கி இருந்தது.

இதேவேளை பலத்த காற்றின் காரணமாக மரங்கள் வீதிகளின் குறுக்காக விழுந்து போக்குவரத்து, தொலைத்தொடர்பு சேவை என்பனவற்றுக்கும் பாதிப்பேற்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தின் கூரை முற்றாக சுழல் காற்று அள்ளிச் சென்றுள்ளதனால் அங்கு பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய இவ்வனர்த்தினால் பொத்துவில் பிரதேச மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடற்தொழிலாளர்களும் பாதிப்படைந்துள்ளனர்.

சேதவிபரங்களை கண்டறிவதற்கான நடவடிக்கையை பிரதேச செயலகமும், அனர்த்த முகாமைத்துவ மையமும் மேற்கொண்டு வருகின்றது.

பாதிக்கபட்ட பிரதேசங்களிலுள்ள கட்டடங்கள் மற்றும் வீடுகளை மீட்கும் நடவடிக்கைகில் இராணுவத்தினர் உதவி வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .