2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை விபத்தில் ஒருவர் பலி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 08 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா,கனகராசா சரவணன்


அம்பாறை, அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டு பிரதான வீதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

முச்சக்கரவண்டியொன்றும் பஸ் வண்டியொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில்  முச்சக்கர வண்டியில் வந்த பயணியே ஸ்தலத்தில்  பலியாகி உள்ளார்.

இச்சம்;பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டியும், அக்கரைப்பற்றிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் மீனோடைக்கட்டு வளைவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த முச்சக்கரவண்டியில் இருபயணிகள் பயணித்துள்ளதாகவும் இவர்கள் நிந்தவூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டியில் வந்த சாரதியும் மற்றுமொருவரும் அவ்விடத்திலிருந்து தப்பித்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்தே இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அப்பிரதேச மக்கள் தெரிவக்கின்றனர்.

சம்பவத்தில் பலியானவரின் சடலம் அவ்விடத்திலேயே காணப்படுவதுடன், முச்சக்கரவண்டியும் முற்றாக சேதமடைந்துள்ளது.
பிரதான வீதியின் இவ்வளைவில் அண்மைகாலத்தில் இடம்பெற்ற சம்பவங்களில் மூவர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .