2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர்  காயமடைந்துள்ளனர்.

கல்முனையில் உள்ள  மதுபானசாலை ஒன்றிலிருந்து  மதுபானப் போத்தல்களுடன்  வீரமுனை கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த  மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானது.

நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த விபத்தின்போது,  எடுத்துச் செல்லப்பட்ட  மதுபானப்  போத்தல்கள்  உடைந்ததால்  மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்கள் இருவரும்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  காரில் சென்ற இருவரும் காயமடைந்த நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .