2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நெனசல இலத்திரனியல் அறிவகங்கள் திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


'ஜனாதிபதியின் கிராமத்துக்கு தொழில்நுட்பம்' வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மூன்று நெனசல இலத்திரனியல் அறிவகங்கள் புதன்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டன.

சம்மாந்துறைப் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத்;, நெசனல இலத்தரனியல் அறிவகத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் அமீர் ஏ பாறுக், உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான் உட்பட பிரதேச சபை உறப்பினர்கள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

திறந்துவைக்கப்பட்ட, நெசனல இலத்தரனியல் அறிவகங்கள் மல்வத்தை பொதுநூலகம், கல்லரிச்சல் பொதுநூலகம், சென்னல் கிராமம் சனசமூக நிலையம் என்பவற்றில் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இங்கு உரையாற்றிய, தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத்

'நகர்புரங்களில் உள்ள மாணவர்களைப்; போன்று கிராமப்புர மாணவர்களும் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேற்றம் பெறவேண்டும். அதனூடாக எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய நல்ல கல்வியியலாளர்களை உருவாக்க வேண்டும்' என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நல்லெண்ண நோக்கத்திலே மேற்படி நெனசல இலத்தரனியல் அறிவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

எமக்கு கிடைத்த வரப்பிரசாதங்களைக் கொண்டு இப்பிரதேச மாணவர்கள் தங்களை வளப்படுத்துக் கொள்ள வேண்டும்' என அவர் கேட்டுக்கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .