2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாழடைந்த கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 12 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

கல்முனை பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்களை இன்று சனிக்கிழமை மாலை விசேட அதிரடிப்படையினர் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று மாலை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் கல்முனை இரண்டாம் பிரிவு அம்மன்கோவில் வீதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கியின் இரண்டு மகசீன்கள், 70 ரவைகள் என்பன மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட வெடிபொருட்களை கல்முனை பொலிஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .