2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனை மேயர் நாளை விசேட உரை?

Super User   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராசாஹிப் இராஜினாமா செய்வதற்கான காலக்கெடு எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை முடிவடையவுள்ள நிலையில், கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

கல்முனை மாநகர சபையின் சபா மண்டபத்தில் இடம்பெறவுள்ள இந்த மாதாந்த கூட்டத்தில் தனது இராஜினாமா தொடர்பிலான விசேட உரையொன்றினை கல்முனை மேயர் நிகழ்த்துவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, சாய்ந்தமருது பிரதேச மக்களை கல்முனை மேயர்; இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கருத்துக்களை பெறவுள்ளதாக கல்முனை மேயர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனை தொடர்ந்து எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ள மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் விசேட உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • VALLARASU.COM Tuesday, 29 October 2013 06:28 AM

    மேயரே, தலைவர் போடும் தாளத்திற்கு எல்லாம் நீங்கள் ஏன் காவடி ஆட வேண்டும்?

    Reply : 0       0

    rahim Tuesday, 29 October 2013 11:58 AM

    மேயரின் விசேட உரை தனது பதவியை இராஜினாமா செய்து பிரதி மேயரிடம் கையளிப்பது மனதுக்கு சங்கடமானாலும் தவிர்க்க முடியாதது என்று ஆருடம் சொல்லலாமா...????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .