2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உயர்கல்வி அமைச்சர் தென்கிழக்குப் பல்கலைக்கு விஜயம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-
ரீ.கே.றஹ்மத்துல்லா

உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு செவ்வாய்க்கிழமை (29) விஜயம்செய்தார்.
இவ்விஜயத்தின்போது, பல்கலையின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம் இஸ்மாயில், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகளுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

பல்கலைக்கழகத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தற்கால செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் திசாநாயக்க பல்கலைக்கழகத்தில் பதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற பீடங்களுக்கான கட்டடத் தொகுதிகள் மற்றும் அபிவிருத்தி வேலைகளையும் இதன்போது பார்வையிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .