2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஸாஹிரா கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.ரம்ஸான்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மாணவர்கள் இன்று புதன்கிழமை கல்வி நடவடிக்கையினை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதி கல்வி பணிப்பாளரினால் கல்லூரியின் பிரதி அதிபர் தாக்கப்பட்டதை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தினால் பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இருந்து கல்முனை பிரதான வீதியூடாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வரை சென்று மீண்டும் பாடசாலைக்குத் திரும்பினா்.

இதேவேளை, பிரதி அதிபர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிரதி கல்வி பணிப்பாளர் மற்றும் அவரது சகோதரரான ஆசிரியர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் மாணவர்களுக்கு அவதூறான வார்த்தைகளினால் ஏசிய ஆசிரியரொருவரையும் பாடசாலையிலிருந்து இடமாற்றுமாறும் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

கல்முனை வலயக் கல்வி  பணிப்பாளர் ஹாசீம், பாடசாலைக்கு விஜயம் செய்து கள நிலைவரங்களை ஆராய்ந்துள்ளார். அத்துடன் வலயக் கல்வி பணிப்பாளர் இன்று நண்பகல் கல்லூரிக்கு விஜயம் செய்து ஆசிரியர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .