2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கல்முனை மாநகர முதல்வராக நிசாம் காரியப்பர் கடமைகளை பொறுப்பேற்றார்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான், முஜாஹித்


கல்முனையின் புதிய முதல்வராக  நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர், கல்முனை மாநகர முதல்வராக கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சாய்ந்தமருது மற்றும் கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல்களில்  இடம்பெற்ற துஆப் பிரார்த்தனைகளைத் தொடர்ந்து அங்கிருந்து மாநகர சபை அலுவலகம் வரை ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பள்ளிவாசல் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள்,  மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்த இவ் ஊர்வலத்தில், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள உட்பட அரசியல், சமூக  பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .