2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலையின் பிரயோக விஞ்ஞானபீடம் மீண்டும் திறப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

காலவரையறையின்றி மூடப்பட்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை ஆரம்பி;க்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவ குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து 53 மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் பிரயோக விஞ்ஞான பீடத்தின் 02ஆம், 03ஆம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆரம்பிக்கபட்டுள்ள கல்வி நடவடிக்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுறும் வரை இவர்களுக்கான தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .