2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

Super User   / 2013 நவம்பர் 20 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள பொத்துவில் பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை சபை தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசிதினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வரவு –செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக தவிசாளர் எம்.எஸ்.எம்.வாசித், பசறிச்சேனை முபாரக், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த பதுர்க்கான் மற்றும் மஜீத் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதி தவிசாளர் தாஜூதீன், மர்சூக், ரஹீம், முபாரக் மற்றும் தமிழரசு கட்சியின் துரைரத்தினம் ஆகியோர் எதிராக வாக்களித்துள்ளனர்.

இதனால் மேலதிக ஒரு வாக்கினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நான்கு உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையில் நீண்ட நாட்களாக முரண்பாடுகள் காணப்பட்டு வருகின்றன.

  Comments - 0

  • அஅ.ரகளை Thursday, 28 November 2013 04:46 AM

    எதற்கு முரண்பாடு

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .