2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கல்முனை மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பர் தலைமையில் மாநகர சபை உறுபினர்களுக்கும் இந்திய துணை தூதுவர் குமரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று  வெள்ளிக்கிழமை மாலை இந்தி தூதுவராலயத்தில் இடம்பெற்றது.

கல்முனை நூலக அபிவிருத்தி, சுமார் 250 மில்லியன் பெருமைதியான திண்மக்கழிவு அகற்றல் முகாமைத்துவ வேலைத்திட்டம் மற்றும் அதனூடான மின்னுற்பத்தி போன்றவற்றை விரைவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக துணை தூதுவர் கலந்துரையாடலின் போது உறுதியளித்தார்.

மேலும் கல்முனை முதல்வர் சட்டமுதுமாணி நிசாம் காரியப்பரினால் இந்திய துணை உயர்ஸ்தானிகர் குமாரனை கல்முனைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இதேவேளை இந்திய துணை உயர்ஸ்தானிகரால் இந்தியாவின் கேரளா உள்ளூராட்சி அதிகார நிறுவத்தின்ஊடாக  கேரளாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு தொடர்பான கற்கை நெறியினை பயில்வதற்காக கல்முனை மாநகர சபை உறுப்பினர் குழுவினை வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

இக் கலந்துரையாடல் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத்தலைவரும்மான  ஏ.எம். ஜெமீல், ஸ்ரீ.ல.மு.கா.அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எம். பரக்கத்துல்லாஹ், மாநகர சபை ஸ்ரீ.ல.மு.கா உறுப்பினர்களான ஏ.எல்.எம். முஸ்தபா, ஏ.ஏ.பஷீர், எம்.எல்.சாலிதீன், தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் ஏ.அமிர்தலிங்கம், ஐ.ம.சு.கூட்டமைப்பு சார்பில் ஏ.எம். ரியாஸ், ஸ்ரீ.ல.மு.கா கட்சியின் சர்வதேச தொடர்பாடல் அதிகாரி  சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் மற்றும் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .