2025 மே 05, திங்கட்கிழமை

50 பேருக்கான கொரோனா சிகிச்சை மையம்

Princiya Dixci   / 2021 மே 19 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்றில் முதல் கட்டமாக சுமார் 50 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய சகல வசதிகளுடன் கூடிய கொரோனா அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் இக்காலத்தில் முன்னேற்பாடாக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று எபெக் இன்ரநேசனல் அமைப்பின் அனுசரணையில், அக்கரைப்பற்று மாநகர சபையோடு இணைந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முழுப் பொறுப்புடன் இந்தச் சிகிச்சை மையம் இயங்கவுள்ளது.

இது தொடர்பாக அக்கரைப்பற்று மாநகர மேயர் அதாஉல்லா அஹமட் சகி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் அக்கரைப்பற்று எபெக் இன்ரநேசனல் அமைப்புக்கும் மேயர் நன்றி தெரிவித்தார்.

இக்கொரோனா சிகிச்சை மையம், இன்னும் சில நாட்களில் தயார்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X