2025 மே 05, திங்கட்கிழமை

98 பேர் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு

A.K.M. Ramzy   / 2021 மே 17 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஸாகிர்

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரில் இருந்து 98 மாணவிகள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பில் உள்ளதாக கல்லூரியின் அதிபர் யூ.எல்.அமீன் தெரிவித்தார்.

கல்லூரியில் இருந்து இம்முறை உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மருத்துவத்துறைக்கான வாய்ப்பு 11 பேருக்கும் ஏனைய துறைகளுக்கான வாய்ப்பு 31 பேருக்கும் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் பொறியியல் துறைக்கான வாய்ப்பு ஒருவருக்கும் ஏனைய துறைகளுக்கான வாய்ப்பு 12 பேருக்கும் தொழிநுட்ப பிரிவில் 06 பேருக்கும் வர்த்தகப் பிரிவில் 03 பேருக்கும் கலைத்துறைப்பிரிவில் சட்டத்துறைக்கான வாய்ப்பு ஒருவருக்கும் ஏனைய துறைகளுக்கான வாய்ப்பு 33 பேருக்கும் என மொத்தமாக 98 பேருக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கு இம்முறை வாய்ப்பு உள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X