Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 11 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அக்கரைப்பற்று நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவில் சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலையை எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு விவசாயிகளுக்கு அப்பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளார் ரீ.மயூரன், இன்று (11) கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறுபோக நெற்செய்கைக்கான விதைப்பு வேலை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் வலதுகரை வாய்க்கால் நீர்ப்பாசனத்துக்கு உட்பட்ட அக்கரைப்பற்று, தீகவாபி, இலுக்குச்சேனை ஆகிய இடங்களில 10 ஆயிரத்து 100 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இங்கு விதைப்பு வேலையை எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் முடிக்க வேண்டும்.
இப்பிரிவில் ஆற்றுப்பாய்ச்சலுக்கு உட்பட்ட வீரையடியில்; 23 ஆயிரத்து 2 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இங்கு மே 5ஆம் திகதிக்குள் விதைப்பு வேலையை முடிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதிக்கப்படாத காணிகளுக்கு எக்காரணம் கொண்டு நீர் விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
33 minute ago
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
25 Jan 2026
25 Jan 2026