2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அக்கரைப்பற்றில் விழிப்புணர்வு நடவடிக்கை

Niroshini   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.கார்த்திகேசு

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச சுகாதரா வைத்திய அதிகாரி காரியலம் இன்று வியாழக்கிழமை முதல் பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச்  சென்று விழிப்புனர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றது.

சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஏ. பாசிலா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், குடும்ப சுகாதார பரிசோதகர்களான ஏ.எச்.பௌமி, ஏம்.ஹாறூன்,பூச்சியல் அதிகாரி எம்.ஏ.நஹீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, நுளம்பு பெருகும் இடங்கள், நுளம்பினால் ஏற்படும் பாதிப்புக்கள்,கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

இதேவேளை,அம்பாறை, திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவில் சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைவாக டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரியா தலைமையில் வீடுகள் பரிசோதிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X