Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 30 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
தற்காலத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் சுமார் 20 சதவீதமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் இந்நிலைமை பாரதூமானதாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை அதிகார எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஒரே நாளில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனையடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 68 ஆக உயர்வடைந்துள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 86 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே, புதிதாக 13 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த மூன்று தினங்களாக மேற்கொள்ளப்பட்ட சுமார் 200 பேரின் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளிவரவுள்ளன.
இப்பரிசோதனையானது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புபட்ட 50 சதவீதமானோரிடத்திலும், கொரோனா தொற்றுக்கு சாத்தியமானவர்கள் என இனங்காணப்பட்ட 50 சதவீதமானோரிடத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுதாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago