Freelancer / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகராக டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
பதில் வைத்திய அத்தியட்சகராக டொக்டர் எம்.எச்.எம். சனூபர் கடந்த 03 மாதங்களாக கடமையாற்றிய நிலையில், சுகாதார அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (20) நடைபெற்ற இந் நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை குழு உறுப்பினர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், வைத்திய அதிகாரிகள், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டொக்டர் றஜாப், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராகவும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. (N)
6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago