Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
A.K.M. Ramzy / 2021 மே 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் கொரோனா சமூகப் பரவல் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு வெளியிடங்களிலிருந்து அக்கரைப்பற்று நகருக்கு வருபவர்கள் தொடர்பாக பொலிஸார் மற்றும் சுகாதார பகுதியினருக்கு அறிவிக்க வேண்டுமென, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் சக்கி தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேசத்தை கொரோனா நோயிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பாக ஆராயும் விசேட கொரோனா பாதுகாப்பு செயலணிக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (17) அக்கரைப்பற்று மாநகர சபையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று நகருக்கு வரும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடித்து சமூக இடைவெளியைப் பேணுமாறும், பொலிஸார் மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி பொது மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளி பேணி நடந்து கொள்ளுமாறும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டல் செய்வதாகவும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியைப் பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
வெளியிலிருந்து வீடுகளுக்குச் செல்வோர் கட்டாயம் முகம், கைகளை கழுவிக் கொள்ளுதல். தேவையில்லாமல் பொது இடங்களில் ஒன்று கூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுதல்.
அரசாங்கத்தினால் கொவிட்-19 தொடர்பாக விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டுமென, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானங்களை கடைப்பிடித்து ஒத்துழைப்பு வழங்குமாறும், தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.எஸ். றஸான், அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர், அக்கரைப்பற்று வர்த்தக சங்க பிரதிநிதி அப்துல் ஸலாம் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago