2025 மே 01, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்வைப்பு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான  ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(18) நடைபெற்றபோது அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், தீகாவாபி போன்ற கிராமங்களின்  அபிவிருத்திகள் தொடர்பான முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்ட கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனையிலுள்ள டாக்டர் ஜலால்தீன் வீதியில் குடாக்கரை கிழல் கண்டத்தில் கைவிடப்பட்டுள்ள சதுப்புநிலக் காணியில் 20 ஏக்கரை சுவீகரித்து அப்பிரதேசத்தில் மிக முக்கிய வளங்களை ஏற்படுத்துதல்,  ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றி மீனவர்களின் படகுகளுக்கு போக்குவரத்து செய்யக்கூடிய வகையில் ஒழுங்கு செய்தல், கோணவத்தை நடைபாலத்தை நிர்மாணித்தல்,  குடாக்கரை கிழல் மேல்கண்டத்தின் ஊடாக செல்லும் அஸ்ரப் வீதியையும் அதனோடு தொடர்புடைய பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்தல், ஆலம்குளம், தீகாவாபி ஊடாக அக்கரைப்பற்றுக்கு இடையிலான பஸ் சேவை, ஒலுவில் குப்பைமேட்டை வேறிடத்துக்கு மாற்றுதல்,  அட்டாளைச்சேனையிலுள்ள மீன்சந்தை, மாடறுக்கும் மடுவத்தை வேறிடங்களுக்கு மாற்றுதல், அட்டாளைச்சேனையில் யானை வேலி உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.  
42 சமுர்த்திப்  பயனாளிகளுக்கான நிதியைக் கையளித்தல், மீன்வாடி உரிமையாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பிலும் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .