Freelancer / 2022 ஜூன் 01 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கனகராசா சரவணன்)
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள கடை ஒன்றின் கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த, சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை கொள்ளையடிச்து சென்ற சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றில், அதன் முதலாளி நெல் அறுவடையின் வியாபாரத்துக்காக உரப் பையை களஞ்சியப்படுத்தி வைத்திருந்துள்ளார். இந்த நிலையில், குறித்த களஞ்சியபடுத்திய கடைக்கு சென்ற போது கடை கதவின் பூட்டை இரும்பு வாளால் வெட்டி கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உரப் பைகளை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
21 Dec 2025