2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அதிக விலையில் உரம் விற்றால் வழக்கு

Princiya Dixci   / 2021 மே 13 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி, இன்று (13) தெரிவித்தார்.

கொவிட்-19 அசாதாரண சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக விவசாயிகளால் முறையிடப்பட்டது.

இதனையடுத்து, அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்கவின் ஆலோசனைக்கமைய, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்டப் பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார  தலைமையில், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் நேற்று (12) மாலை சுற்றிவளைப்புகளை மேற்கொண்டனர்.

தேசிய உரச் செயலகத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை மீறி, கூடுதலான விலைக்கு யூரியா உரம் விற்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்தத்  திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்த வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கெதிராக நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்துக்கமைய வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கூறினார்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, காலவதியான உரம் மற்றும் கிருமிநாசினிகளும்  கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இவ் உர விற்பனை நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X