Princiya Dixci / 2021 மே 25 , பி.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். இர்ஷாத்
அம்பாறை, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட பட்டினப்பள்ளி பகுதியில் சிற்றுண்டிச்சாலையொன்று, சுகாதார அதிகாரிகளின் அனுமதி இன்றி, இன்று (25) காலை திறக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்த அப்பகுதி சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ காதர் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், திடீரென்று அங்கு விஜயம் செய்து சிற்றுண்டிச்சாலையை உடன் மூடினர்.
அத்துடன், அங்கிருந்தவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .