2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

’அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்க’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜூன் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில், ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் செல்லும் மீனவர்கள், தங்களது மீன்பிடிப் படகுகளை பதிவு செய்துகொள்ளாவிடின், விரைவில் பதிவு செய்து, மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு, அட்டாளைச்சேனை பிரதேச மீன்பிடிப் பரிசோதகர் எஸ்.பாவு, இன்று (10) தெரிவித்தார்.

ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலிருந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் செல்லும் மீனவர்கள், தத்தமது மீன்பிடிப் படகு, வள்ளம், தோணி, இயந்திரம் போன்றவற்றுக்கு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறினார்.

பதிவுசெய்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவத்தைப் பெற்றுக்கொண்டு, மீன்பிடிப் படகு தொடர்புடைய விவரம், மீன்பிடித் தொழிலுக்காகச் செல்வோரின் விவரம் போன்றவற்றைச் சமர்ப்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த அனுமதிப்பத்திரம் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட படகுகள், வள்ளங்கள், தோணிகள் என்பன, ஒலுவில் துறைமுகக் கடல் பிரதேசத்தில் வைத்து, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

இதனால், மீனவர்கள் எதிர்நோக்கும் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கும் பொருட்டே இந்தப் பணிப்புரை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், அரசாங்கத்தால் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிபொருள் மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, இந்த அனுமதிப்பத்திரம் அவசியமானது என்பதால், இதை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X