Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 05:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.சி.அன்சார்
சம்மாந்துறை மக்களின் நீண்டகாலத் தேவையாகவுள்ள நவீன பஸ் தரிப்பிடம்;, புதிய பொதுச் சந்தை, நகர மண்டபம் ஆகியவற்றை அமைப்பதற்காக சம்மாந்துறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பிரதான காரியாலயம் மற்றும் நகர மண்டபம் அமைந்துள்ள நான்கு ஏக்கர் காணி உள்ளது. மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக சம்மாந்துறைப்பற்று பலநோக்குக் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து தீர்வொன்றுக்கு வரவுள்ளதுடன், நிர்வாகம் ஒத்துழைக்காத சந்தர்ப்பத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டத்தின் கீழ் காணியினைப் பெற்று திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை(16) நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையிலே,'சம்மாந்துறைப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாத பாரிய சவால்கள் இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு என்னுடைய காலத்தில் ஏற்பட்டுள்ளது. இருந்தும் அபிவிருத்தியில் நீண்டகாலமாக பின்தங்கியுள்ள சம்மாந்துறையை அபிவிருத்தி செய்ய எவ்வாறான சவால்கள், தடைகள் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொண்டு முறியடிக்க தயாராகவுள்ளேன். அதற்கு அனைவரும் எனக்கு ஆதரவு தரவேண்டும்.
2017ஆம் ஆண்டிற்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம், பன்முகப்படுத்தப்பட்ட வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டம் சம்பந்தமாக ஆராயப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
7 hours ago