2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த விசேட திட்டமிடல் செயலணி நியமனம்

Editorial   / 2018 ஓகஸ்ட் 13 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மற்றும் சம்மாந்துறைப்  பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவுபடுத்தும் பொருட்டு, கல்முனை மாநகர முதல்வர் செயலகத்தின் கீழ், விசேட திட்டமிடல் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தச் செயலணி, இன்று (13) தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளதாக,  மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

அரச தொழில் முயற்சி, கண்டி நகர அபிவிருத்திப் பிரதியமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் ஆலோசனையின் பேரில், நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்த விசேட பணிப்புரையின் பிரகாரம், இந்தச் செயலணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கட்டடங்கள் திணைக்களத்தின் கல்முனைப் பிராந்திய பிரதம பொறியியலாளர் ஏ.எம்.சாஹிர் தலைமையில் இயங்கவுள்ள இத்திட்டமிடல் செயலணியில், நகரத் திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் இரண்டு பொறியியலாளர்களும் எமது மாநகர சபையின் இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

இச்செயலணியானது, மேற்படி அமைச்சின் கீழ், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பிராந்தியங்களில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, மூலோபாய நடவடிக்கைகளுடன் துரிதப்படுத்துவதுடன் எதிர்காலங்களில், நகர திட்டமிடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தையும் தயாரித்தல், முன்னெடுத்தல் உள்ளிட்ட அனைத்துக் கருமங்களையும், வினைத்திறனுடன் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளதாக, மாநகர முதல்வர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X