Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, றியாஸ் ஆதம்,எஸ்.எம்.அறூஸ்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்உதுமாலெப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (10) புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அமைச்சர் தயா கமேகயும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக கே.கோடிஸ்வரன் ஆகியோர் ஏற்கெனவே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எம்.எஸ்.உதுமாலெப்பை அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
22 minute ago
27 minute ago
35 minute ago