Editorial / 2021 மே 28 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் கொரோனா சட்டதிட்டங்களை மீறி, அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்தியத்தில் உள்ள காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வழமை போன்று மக்கள் பயணங்களில் ஈடுபடுவதை காண முடிகின்றது.
குறிப்பாக, நேற்று (27) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள இப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதி உள்வீதி மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள உள்ளக வீதிகளில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி தத்தமது வாகனங்களில் மக்கள் வழமை போன்று நடமாடினர்.
பொலிஸார், சுகாதாரத் தரப்பினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் மந்த கதியில் உள்ளதை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மக்கள் இவ்வாறு பயணக் கட்டுப்பாட்டு மீறலில் ஈடுபடுகின்றனர்.
நாட்டின் சகல பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகின்ற கொரோனாவின் 3ஆவது அலையைத் தவிர்ப்பது நாட்டிலுள்ள சகல பிரஜைகளின் கடமையல்லவா?

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .