Freelancer / 2023 மார்ச் 23 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் பிரதான வீதியிலுள்ள புடவைக் கடையொன்று, இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடையை வழமை போன்று நேற்றிரவு பூட்டிவிட்டு சென்ற நிலையில், சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் கடை தீப்பற்றி எரிவதை அருகிலுள்ள பொதுமக்கள் அவதானித்து, பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, தீயணைக்கும் படை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீயால் மேல் மாடியை கொண்ட கடைத் தொகுதி முற்றாக ஏரிந்துள்ளதுடன், சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(N)
11 minute ago
26 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
26 minute ago
44 minute ago