Yuganthini / 2017 ஜூன் 07 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வசந்த சந்திரபால
அம்பாறை பொலிஸ் தலைமையகத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் சிறுவர் - மகளிர் பிரிவு போன்றன, அம்பாறை மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்க மற்றும் மாவட்டத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜேசேகர ஆகியோரால், இன்று(07) திறந்துவைக்கப்பட்டன.
'இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக் கட்டடம், யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனமூலம், சிறுவர்கள் மற்றும் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கும் இடமாக, இப்பிரிவு தொழிற்படும்' என்று, பிரதிப் பொலிஸ் மா அதிபர், இதன்போது கூறினார்.
31 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026